முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவால் முயற்சியில் ஈடுபட்ட இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அபர்ணா குமார் தனது சாதனையை நிறைவு செய்தார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார் (45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான பயிற்சியை கற்றுத் தேர்ந்தார். அதிலிருந்து ஆபத்து நிறைந்த பல்வேறு மலை சிகரங்களை அடைவதை தனது இலக்காக கொண்டு உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள தென்துருவத்தில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 டிகிரி அளவிலான கடும்குளிரிலும் வெற்றிகரமாக ஏறினார். தற்போது வட அமெரிக்காவில் 20 ஆயிரத்து 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தெனாலி மலைச்சிகரத்தை அடைந்து தனது சாதனையை இவர் நிறைவு செய்தார். அரசுப் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரி என்ற வகையில் முதன்முதலாக இந்த சாதனையை செய்தவர் அபர்ணா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து