முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன் -ராகுல் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஜூலை : காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா என்ற என்னுடைய முடிவில் மிகவும் தெளிவாகவே உள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்று கூறியுள்ளார்.

அசோக் கெலாட் வெளியிட்ட டுவிட் செய்தியில், இப்போதைய சூழ்நிலையில் அவரால் [ராகுல் காந்தி] மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது,” எனப் பதிவிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ தன்னுடைய முடிவில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக உள்ளார்.

தனது முடிவு குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து