இதுவரை 13 விக்கெட்: ஷமிக்கு சச்சின் பாராட்டு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      விளையாட்டு
Shami-Sachin 2019 07 01

லண்டன் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, மூன்று ஆட்டங்களில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால், சச்சின் டெண்டுல்கரின் பாராட்டை பெற்றுள்ளார்.

3 போட்டியில்...

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு, புவனேஷ்வர் குமார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்கு விக்கெட்டும், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்களும் கைப்பற்றினார். மூன்று போட்டியில் 13 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.

மகிழ்ச்சியாக...

சிறப்பாக பந்து வீசி வரும் ஷமியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். முகமது ஷமியின் பந்து வீச்சு குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த மூன்று போட்டிகளில் முகமது ஷமியின் பந்து வீச்சை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் ஸ்பெல்லை பார்க்க அபாரமாக இருந்தது. குறிப்பாக சீம் பொஷிசனில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். வரும் போட்டிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும்’’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து