விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்தவர் தவறி விழுந்து பலி - கென்யாவை சேர்ந்தவர்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      உலகம்
kenay airline passenger death 2019 07 02

லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் திருட்டுத்தனமாக பயணித்தவர் என்றும், கென்யா நாட்டை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு கென்யா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு செந்தமான விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம், லண்டன் வான்பரப்புக்குள் பயணம் செய்த போது, கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் விமானத்தில் பயணம் செய்த நபர் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் தோட்டத்தில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நபர் அங்கேயே ஒளிந்து கொண்டு நடுவானில் விமானத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று விமான ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்து உயிரிழந்த நபரை அடையாளம் காண உதவுமாறு கென்யா உயர் அதிகாரிகளை லண்டன் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து