கனமழையால் மிதக்கும் மும்பை கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Mumbai-Heavy-rain 2019 07 02

மும்பை : கனமழையால் வெள்ளத்தில் மும்பை மிதக்கிறது. இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பஸ், ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் 100 மிமீ மழை பெய்துள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவசர சேவைகள் மட்டும் செயல்பட்டன. நேற்றும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து