முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.சி சாதிகளை எஸ்.சி பட்டியலில் சேர்ப்பதா? பகுஜன் சமாஜ் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஓ.பி.சி பட்டியலில் உள்ள 17 சாதியினரை எஸ்.சி பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என பாராளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) உள்ள 17 சாதிகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (எஸ்.சி) சேர்த்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட 17 சாதியினருக்கும் எஸ்.சி என்ற பெயரில் சாதிச்சான்றிதழ் வழங்கும்படி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஆணையர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.  யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திலும் எழுப்பியது. மாநிலங்களவையில் நேற்று ஜீரோ அவரில், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா இந்த பிரச்சனையை எழுப்பி பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) பட்டியலில் உள்ள 17 சாதியினரை தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி) பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்பு சட்டவிதி 341 பிரிவு 2-ன்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. ஜனாதிபதிக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது.

எனவே, எஸ்.சி. பட்டியலில் எந்த மாற்றமும் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமும் இல்லாத நிலையில், இந்த 17 சாதியினரும் ஓ.பி.சி வகுப்பினருக்கான நன்மைகளையும் பெற முடியாது, எஸ்.சி. வகுப்பினருக்கான நன்மையையும் பெற முடியாது.   
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து