முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்ஜா மன்னரின் மகன் லண்டனில் மறைவு - அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

சார்ஜா : சார்ஜா மன்னரின் மகன் லண்டனில் காலமானதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவை சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி. கடந்த 2008-ம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதன் பிரதான கடை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சோஹோவில் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி திங்கட்கிழமை காலமானார். அவரது மறைவு குறித்த செய்தியை ஐக்கிய அமீரக ஆட்சியாளர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சார்ஜா மன்னர் மகன் மறைவையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  ஷேக் காலித் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சமூகவலை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.  ஷேக் காலித்தின் உடல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடத்தி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து