முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணெய் இறக்குமதி விவகாரம்: இந்தியாவின் உறவு எங்களுக்கு எதிரானது அல்ல: ஈரான் நம்பிக்கை

புதன்கிழமை, 3 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில், இந்தியாவின் உறவு எங்களுக்கு எதிரானது அல்ல என்று ஈரான் கூறியுள்ளது. 

ஈரான் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய சலுகையை மே 2-ம் தேதியுடன் ரத்து செய்தது. இதன் காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இது தொடர்பாக பேசியுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி, அமெரிக்காவின் அழுத்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, மற்ற நாடுகள் உடனான இந்தியாவின் உறவு, எந்த வகையிலும் ஈரானுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.

இந்திய அரசின் முடிவுகளுக்கு மதிப்பு அளிப்பதாகத் தெரிவித்த அலி செகேனி, இருப்பினும் நட்பு நாடு என்கிற அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியா எண்ணெய் இறக்குமதியை தொடரும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். நாட்டின் நலனுக்கேற்றவாறு இந்தியா செயல்படும் பட்சத்தில், அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பின் காவலனாக ஈரான் இருக்கும் என்றும் அலி செகேனி திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரூபாய் அல்லது ஐரோப்பிய பணத்தின் அடிப்படையிலோ, பண்டமாற்று முறையிலோ கூட எண்ணெய் இறக்குமதி செய்ய தயார் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து