முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவி பிரிந்ததால் விரக்தி: கவிஞராக மாறிப் போன துபாய் மன்னர் ஷேக்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

துபாய் : துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது மனைவி தலைமறைவான விரக்தியில், அது குறித்து கவிதைகளை எழுதி வருகிறார்.

துபாயை ஆட்சி புரிபவர் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம். 69 வயதான இவரது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைன். இருவருக்கும் சையத், ஜலீலா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னரிடம் இருந்து ஹயா விவாகரத்து கோரியுள்ளார். அதன் பின்னர் மன்னரை விட்டு பிரிந்து கடந்த மே மாதம் தனது குழந்தைகளுடன் தலைமறைவானார். ஹயா, ஜெர்மனிக்கு சென்றதாகவும், அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹயா, லண்டனில் தலைமறைவாகி இருப்பதாகவும், அங்கு தஞ்சம் கேட்டுள்ளதாகவும் செய்தி பரவியது.

இந்நிலையில் மனைவி பிரிந்த விரக்தியில் உள்ள துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், கவிதைகளை உருது மொழியில் எழுதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதைக்கு, நீ வாழ்ந்தாய், இறந்தாய் என தலைப்பிட்டு குறிப்பிட்டிருப்பதாவது:-

நீ நம்பிக்கை துரோகி, விலைமதிப்பற்ற என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டாய். உனது விளையாட்டு வெளியே தெரிந்து விட்டது. நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்து விட்டன. இனி உனக்கு என் இதயத்தில் இடமில்லை. நாம் யாராக இருந்தோம்? நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல. இனி உன்னை பற்றிய கவலை இல்லை. இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து