முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் குஞ்சுகளுக்கு தாய் பறவை உணவாக வழங்கும் சிகரெட் துண்டு வலைதள புகைப்படத்தால் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு சிகரெட் துண்டை உணவாக வழங்கிய புகைப்படம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்து கொண்டிருப்பது வழக்கம். இதனை அழகாக புகைப்படம் எடுக்க கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார். வரிசையாக பல பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்த போது பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சிடம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த பறவையின் வாயில் உணவு இருந்துள்ளது. தனது குஞ்சிடம் அதனை கொடுக்கும் போது புகைப்படம் எடுக்க வேண்டும் என கரேன் நினைத்தார். அருகில் வர வர கேமராவை ரெடியாக வைத்து கொண்டு சரியான தருணத்திற்காக காத்திருந்தார். தாய் பறவை உணவை கொடுக்கவே சரியாக படம் பிடித்தார். பின்னர் அந்த உணவை வாங்கிக் கொண்ட குஞ்சுகள், கரேனின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது போல் இருந்த ஒரு நிகழ்வையும் படம் பிடித்தார்.

அந்த தாய் பறவை தனது குஞ்சுக்கு கொடுத்தது மீதம் விடப்பட்ட சிகரெட் துண்டு. புகைப்படத்தை கரேன் திரும்ப பார்த்த போதுதான் எங்கோ, யாரோ பாதி தீயை அணைத்து கீழே போட்ட சிகரெட் துண்டு என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கரேன் தனது பேஸ்புக் பக்கத்தில், இதுபோன்று அலட்சியமாக சிலர் செய்யும் செயல்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. இப்படி யாரும் இனி தயவு செய்து செய்யாதீர்கள் என உருக்கமாக கூறி புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து