முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் வான்வழித் தாக்குதல்: 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பாக்தாத் : ஈராக்கில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். இரு நாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் தாக்குதல் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய சில பயங்கரவாதிகள் ஈராக் - சிரியா இடையிலான மலையோர எல்லைப் பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்தவாறு அரசுப் படையினர் மீது அவ்வப்போது அதிரடியாக கொரில்லா தாக்குதல்களை நடத்துகின்றனர்.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ஈராக் பாதுகாப்பு படையும், அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், அமெரிக்க - ஈராக் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் மொத்தம் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து