முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச். 1 - பி விசா முறைகேட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் கைது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் எச். 1-பி விசா மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ, வெங்கட்ரமணா மனனம், பெர்னாண்டோ சில்வா மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சதீஸ் வெமுரி ஆகிய 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் 4 பேரும் எச். 1-பி விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது ரகசிய விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு எச். 1-பி விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்தி கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றி விடுவார்கள். இந்த மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இது தொடர்பாக வழக்கு விசாரணை நியூஜெர்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் அவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டரை லட்சம் டாலர்கள் (ரூ.1 கோடி யே 72 லட்சம்) அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து