முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் - மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மோடி பிரதமராக 2-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான நான்கு மாத செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட் இருந்தது.

புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2-வது பெண் நிதியமைச்சர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். மத்திய பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமானவரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. இரண்டரை லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் கட்டிடத்துறை, சேவை, குறு - சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கும், நீர் ஆதார நிர்வாகத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி 2018-19-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து