சீனாவில் சூறாவளியில் சிக்கி 6 பேர் பரிதாப பலி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      உலகம்
Cyclone- China 2019 07 05

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் திடீரென பயங்கர சூறாவளி தாக்கியது.மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்தது. இந்த சுழற்காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் துவம்சம் ஆகின. வாகனங்கள், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன.இந்த பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து