முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிமலை வெடித்து சிதறியதில் கல் தாக்கி சுற்றுலா பயணி பலி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இத்தாலியில் எரிமலை திடீரென வெடித்ததில், மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று உள்ளது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்த போது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு வானுயரத்துக்கு சாம்பல் புகையை கக்கி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து