முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்கு உதவ நிதி ஒதுக்கீடு: போயிங் நிறுவனம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.688 கோடி) ஒதுக்கீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானம் தொடர்ந்து 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 346 பேரும் பலியாகினர். அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் 737 மேக்ஸ் விமான பயன்பாட்டை நிறுத்தி விட்டன. இந்த விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் பலர் போயிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.688 கோடி) ஒதுக்கீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் தொகையில் உயிர் இழந்தோர் குடும்பத்தினரின் கல்வி, உள்ளிட்ட பல செலவுகளுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பில் வாதாடும் வக்கீல்கள் போயிங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை நிராகரித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து