முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

நாட்டின் பெண்கள் முன்னேறாமல் உலகில் எந்த நாடும் முன்னேற முடியாது.  பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என நம்புகிறது. இந்த மத்திய அரசு. பெண்களின் பங்களிப்பை கிராம பொருளாதாரம் அதிகமாக ஊக்குவிக்கிறது. சமூக பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.  மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.

ஒரு சுய உதவி குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவி குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். பெண்கள் மேம்பாட்டுக்கு தனித்திட்டம் புதிதாக உருவாக்கப்படும், அனைத்து துறைகளிலும் பெண்கள் வழிநடத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து