முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டிய நிர்மலா சீதாராமன்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

யானை புகுந்த நிலம் என்ற புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

இந்தியாவை அடையாளப்படுத்தும் 17 சிறப்பு சுற்றுலா மையங்கள் மேம்படுத்தப்படும், இந்தியாவில் இருக்கும் பழங்குடியின மக்களின் கலாசாரம், பண்பாட்டை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கிகள் நிறைய கடன் கொடுக்க வேண்டும். எனவே இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு பொது துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி முதல் கொடுக்க போகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 400 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, 99.3 சதவீத நிறுவனங்கள் இந்த திட்டம் வரையறைக்குள் கொண்டு வந்து விடும்.  அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளோம். கண் தெரியாதவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், பொது பயன்பாட்டுக்கு இவை கொண்டு வரப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  பிசிராந்தையாரை மேற்கோள் காட்டி புறநானூற்று பாடலை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேசினார். யானை புகுந்த நிலம் என்ற அறிவுரையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வழங்கினார் பிசிராந்தையார். நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை என்றும் அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து