முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்காக காந்தி பீடியா அறிமுகம்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டி.வி. சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும். புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்.  ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும் போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும்.  பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ. ஒரு லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம் .  பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், பாரத் நெட் என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து