முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை: மத்திய பட்ஜெட்டில் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய நிலையே தொடரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ரூ. 2.5 லட்சம் என்ற நிலையிலேயே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை.  ஆனால், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு (5 சதவீத கழிவு) என அறிவிக்கப்பட்டது. ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. அதாவது, தனிநபரின் மொத்த வருமானமே ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள், விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த வேண்டும்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து