முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் தாக்கல் செய்வதில் சூட்கேஸ் பாரம்பரியத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பட்ஜெட் தாக்கல் செய்வதில் பாரம்பரிய வழக்கத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன், சூட்கேசுக்கு பதில் அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் ஆவணங்களை எடுத்துச் சென்றார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, பட்ஜெட் நகலை வழங்கி வாழ்த்து பெற்றார். பின்னர் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.  வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள், சிறிய சூட்கேசில் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை சூட்கேசுக்கு பதில்  அரசு சின்னம் பொறிக்கபட்ட சிவப்பு நிற உறையில் பட்ஜெட் ஆவணங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து சென்றார்.

இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த போது, பட்ஜெட் தாக்கல் செய்ய சூட்கேஸ் முறையை பின்பற்ற தொடங்கினர். இந்தியா விடுதலைக்குப் பிறகும் அதே முறை தொடர்ந்தது. நிதி அமைச்சர்கள் சூட்கேஸ்களின் நிறத்தை மாற்றினாலும், சூட்கேஸ் நடைமுறை மாறவில்லை. அந்த பாரம்பரியத்தை நிர்மலா சீதாராமன் மாற்றி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து