முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் மூலம் விலை உயரும் பொருட்கள்: விலை குறையும் பொருட்கள்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

 இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்றாலும், சில பொருட்களின் மீதான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் விலை அதிகரிக்கும் மற்றும் விலை குறையும் பொருட்களின் விபரங்களை இங்கே பார்ப்போம்.

விலை உயரும் பொருட்கள்

பெட்ரோல் - டீசல், சிகரெட், குட்கா மற்றும் புகையிலை, தங்கம், வெள்ளிப் பொருட்கள், முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்,  ஸ்பிலிட் ஏ.சி.க்கள், லவுட் ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்கள்,  இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்கள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை ஏறும். மேலும் முந்திரி கொட்டைகள், இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக், சோப் தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள், வினைல் தரைப்பதிப்பு கற்கள், டைல்ஸ், கண்ணாடி பைபர், கழிவறை டைல்ஸ் மற்றும் சுவர் டைல்ஸ்,  இறக்குமதி செய்யப்பட்ட துருப்பிடிக்காத உலோக பொருட்கள்,  இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்,  செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளுக்கான பேப்பர்கள் மற்றும் நியூஸ் பிரிண்ட்கள்,  மார்பிள் கற்கள், நாற்காலிகள் தயாரிப்பிற்கான பொருட்கள் ஆகியவைகளின் விலை கூடும்.

விலை குறையும் பொருட்கள்

எலக்ட்ரானிக் வாகனங்கள், கேமிரா பாகங்கள் மற்றும் மொபைல் போன் சார்ஜர்கள், செட்-டாப் பாக்ஸ், இந்தியாவில் தயாரிக்கப்படாத, பாதுகாப்பு துறைக்கான இறக்குமதி தளவாடங்கள் ஆகியவைகளின் விலைகள் குறையும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து