முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் ஆதார் சட்டத் திருத்தத்திற்கு அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மத்திய அரசின் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆதார் மற்று பிற சட்ட திருத்த மசோதா 2019-ன் மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
ஆதார் மற்றும் பிற சட்ட திருத்த மசோதா 2019-ஐ நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தனி நபர் தகவல்கள் மற்றும் தனி நபர் அடையாளங்களை பாதுகாப்பதற்காக இந்த மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆதார் கார்டு பத்து வருடங்களுக்கு முன்பு ஆலோசிக்கப்பட்டாலும், 2014-ம் ஆண்டிற்குப் பிறகுதான் ஆக்கபூர்வமான செயல் வடிவம் பெற்றிருக்கிறது. துவக்கத்தில் இத்திட்டம் சாத்தியமற்றது, செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்டது. அதிலும், பன்முகத்தன்மை வாய்ந்த நமது நாட்டில் ஆதார் திட்டத்தை நிறைவேற்றுவதே ஒரு சவாலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் தலைமையில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, சவால்களை சந்தித்து வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு ஆதார் கார்டு திட்டம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இத்திருத்தம் மூலம் ஆதார் கார்டு திட்டத்திற்கு தற்போது வலுவான, அதே சமயத்தில் ஆரோக்கியமான சட்டம் கிடைக்க போகிறது. தனிநபர் தகவல் பரிமாற்றத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை இந்த சட்டம் கொண்டு வருகிறது. பயோமெட்ரிக் அடையாளப் பணிகளில் தனியாரின் பங்களிப்பு இடம்பெற்றுள்ள ஆதார் சட்டப் பிரிவு 57 நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பெற முடியாதவர்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதையும் இந்த திருத்த மசோதா தடுக்கிறது. ஆதார் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் இந்த சட்ட திருத்த மசோதா மூலம்  யூ.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம், தொடர்ந்து சட்டத்தை கடைபிடிக்க மறுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பத்து லட்சம் ரூபாய் அபராதம் போன்ற திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. சி.ஐ.டி.ஆர் -லிருந்து அனுமதியின்றி ஆதார் தகவல்களை பயன்படுத்தினால் மூன்று வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை என்று கடுமையான தண்டனை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் சமுதாயமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் பாரதப் பிரதமரின்  இந்த சீரிய முயற்சி, அனைத்து குடிமக்களுக்கும் பயன் பெறும் வகையில் அமையும். குறித்த நேரத்தில் அரசு நிர்வாகம் மற்றும் சேவைகளை அளித்தல், குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது போன்ற மூன்று முக்கிய நோக்கங்களின் அடிப்படையிலானது. அதுதான் இந்த டிஜிட்டல் ஆதார் கார்டு திட்டம். ஆதார் திட்டம் எந்த அரசின் முயற்சியாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஆதார் கார்டு திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி காட்டியிருக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குறியவர். ஒரு வரியில் சொல்வதென்றால் நேர்மையாளர்களுக்கு ஆதார் கார்டு திட்டத்தால் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் சொந்த காரணங்களுக்காக சில சக்திகள் ஆதார் கார்டு திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் ஆதார் கார்டு சட்ட திருத்த மசோதாவில் உள்ள சிறந்த அம்சங்களுக்காக நான் இந்த ஆதார் சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து