முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்: 8-ம் தேதி முதல் மாலை நேரத்திலும் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டசபை வரும் 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை முதல் இரவு வரை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கடந்த 30-ம் தேதி தொடங்கியது. முன்னதாக கடந்த 28- ம் தேதி அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தின் முடிவில் பேட்டியளித்த சபாநாயகர் தனபால், தமிழக சட்டசபை  ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தார். 

இதற்கிடையில் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போதே அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இடையே தமிழக சட்டமன்றத்தி்ற்கு வந்த சபாநாயகர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-தமிழக சட்டசபை நாளையும், நாளை மறுநாளும் விடுமுறைக்கு பின்னர் திங்கட்கிழமை (8-ம்தேதி ) காலை 10 மணிக்கு மீண்டும் கூடும். அன்று முற்பகல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை 9-ம் தேதி முற்பகல் நீதி நிருவாகம்- சிறைச்சாலைகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை) - சட்டத் துறை - வணிக வரிகள் (வணிக வரி மற்றும் பதிவுத் துறை) - முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு (வணிக வரி மற்றும் பதிவும் துறை, 10-ம் தேதி - சமூக நலம் மற்றும் சத்துணவு • திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை - தகவல் தொழில் நுட்பவியல் துறை,11-ம் தேதி - தொழில் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர, தொழில் நிறுவனங்கள் துறை, 12-ம் தேதி, கைத்தறி மற்றும் துணிநூல் - கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் - வேளாண்மை துறை, 13 மற்றும் 14-ம் தேதி அரசு விடுமுறை, 15- ம் தேதி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை - கட்டிடங்கள் (பொதுப்பணித் துறை) சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), 16-ம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிருவாகம் போக்குவரத்து துறை, 17-ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 18-ம் தேதி, செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 19-ம் தேதி, காவல், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை , 20-ம் தேதி பொதுத்துறை மாநிலச் சட்டமன்றம் , ஆளுநர் மற்றும் அமைச்சரவை , நிதித்துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை , திட்டம், வளர்ச்சித் துறை , ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பிற்பகல் ஏனைய அரசினர் அலுவல்கள், நாள்தோறும் முற்பகலில் காலை 10 மணிக்கு அவை கூடும். பிற்பகல் 2 மணி வரை அவை நடைபெறும். மாலை 4 மணி்க்கு மீண்டும் கூடும் அவை, விவாதம் முடிகிற வரை நடைபெறும் . உறுப்பினர்கள் மணியடித்தவுடன் தங்களது பேச்சை நிறுத்தி விட வேண்டும். இல்லையேல் சபையை நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து