லண்டன் : கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஹிட்டரான யுனிவர்ஸ் பாஸ் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள், உலகக் கிரிக்கெட்டின் மிகவும் சோகமான நாள் என்று ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். பந்தை சிக்சருக்கு மிகவும் எளிதாக விரட்டும் இவரை, யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக அழைப்பார்கள்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அவரது ஐந்தாவது உலகக்கோப்பையாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்தான் உலகக்கோப்பையில் அவரது கடைசி போட்டியாகும். இந்த போட்டி முடிந்த பின்னர் சக வீரர்கள் அவருக்கு சிறப்பான வகையில் மரியாதை அளித்தனர். ஆகஸ்ட் மாதம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. இந்தத் தொடரோடு கெய்ல் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிறிஸ் கெய்ல் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள், உலகக் கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாள் என்று ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷாய் ஹோப் கூறுகையில், கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் விட்டுச் செல்லும் போது ஒட்டுமொத்த உலகமும் அவரை தவற விடும். கிரிக்கெட்டிற்கு அது சோகமான நாளாக இருக்கும்.