பும்ரா பந்துவீச்சு ஸ்டைலை காப்பி அடிக்கும் இங்கிலாந்து சிறுவன்: வலைதளங்களில் வீடியோ வைரல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      விளையாட்டு
SPORTS NEWS 05 2019 07 05

Source: provided

பும்ரா : இந்திய அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சு ஆக்சனை காப்பி அடித்து அவரைப் போல் சிறுவன் பந்து வீசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. தனது அபார திறமையால் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்கிறார். நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வராமல் அருகில் இருந்து ஓடி வந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சாதாரணமாக பந்து வீசக்கூடியவர். மேலும் மற்ற பந்து வீச்சாளர்களை விட இவரது ஆக்சன் மிகவும் வேறுபாடு கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இக்கட்டான நிலையில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பும்ராவை போன்று பந்து வீச இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு ஆசை. தனது ஆசையை அப்பாவிடம் கூற, அவரும் வீட்டின் ஒரு பகுதியில் மகனை பும்ரா போன்று பந்து வீச வைத்தார். அந்தச் சிறுவன் பும்ரா போன்று பந்து வீசி மகிழ்ந்தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து