முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் இம்ரான்கான்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கல் நிறைந்ததாக மாறியது. சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அந்நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது. மேலும் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் இருநாடுகளின் உறவில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 5 நாள் அரசு முறை பயணமாக வரும் 20-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது முதல் முறையாக அவர் டிரம்பை நேரில் சந்தித்து பேசுகிறார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு 22-ம் தேதி நடைபெறும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாட்டு உறவை புதுப்பிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து