இன்று டோனி பிறந்த நாள்: கவுரவப்படுத்த வீடியோ வெளியிட்டது ஐ.சி.சி.

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      விளையாட்டு
dhoni birthday 2019 07 06

புது டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை புகழ்ந்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

2004-ம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த மகேந்திர சிங் டோனி 2007-ம் ஆண்டு துவங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். டோனி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணி பல கோப்பைகளை வென்றுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் டோனி. எதிர் அணியினரிடமும், சக வீரர்களிடமும் பழகும் விதம் காரணமாக பலரும் அவரை கூல் கேப்டன் என்றே பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, தனது 38-வது பிறந்த நாளை இன்று 7-ம் தேதி கொண்டாடுகிறார். இதையடுத்து டோனியைக் கவுரவப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய டோனி என்கிற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் டோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் விராட் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் டோனியின் பங்களிப்பு குறித்து பாராட்டிப் பேசி உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து