முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் - தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி : உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:-

 கேள்வி:- தென்காசி செல்வது பற்றி?

பதில்:- கட்சியிலிருந்து பல பேர் விலகி, இன்றைய தினம் தாய் கழகத்தில் இணைகின்றார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக, தென்காசிக்கு செல்ல இருக்கிறேன்.

கேள்வி:- தொடர்ந்து அ.ம.மு.க.வின் கூடாரம் கலைந்து கொண்டிருக்கிறதே?  மொத்தமாக அ.தி.மு.க.வில் எப்போது இணையும்?

பதில்:- ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர்  ஓ.பி.எஸ்.சும், நானும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மீண்டும்

அ.தி.மு.க.வை வலுப்படுத்தி, அடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே, அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று, இன்றைய தினம் விலகிச் சென்றவர்கள் படிப்படியாக தாய் கழகத்திற்கு வந்து தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:- நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் விதிவிலக்கு கோரியிருக்கிறீர்களா?

பதில்:- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,  தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அண்மையிலே பாரத பிரதமரை சந்தித்த போது கூட, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று தான் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

கேள்வி:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவோம் என ஸ்டாலின் சொல்லியிருக்கார். இந்த மாதிரி இணைந்து செயல்படுவது பல்வேறு விசயங்களிலும் ஒன்றாக இருக்குமா?

பதில்:- அதாவது, இது ஒரு பொது பிரச்சினை ஒரு பொது நிறுவனம்,  மிகப்பெரிய நிறுவனம், பல்லாயிரக்கணக்கான பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற நிறுவனம். நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுகின்ற மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனம் தனியாரிடத்திலே ஒப்படைக்கக் கூடாது என்ற அடிப்படையிலே, இன்றைக்கு மற்ற மாநிலத்தைப் பார்க்கின்ற போது, ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, அவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு, அந்த பிரச்சினையை தீர்க்கின்றார்களோ அதன் அடிப்படையில், இதில் எந்தவித மனமாச்சரியம் இல்லாமல், இன்றைக்கு ஒன்றாக அனைவரும் இணைந்து, இதற்கு குரல் கொடுத்து, இதை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுப்பதற்காக இதற்கு நாம் ஒன்றாக குரல் கொடுக்கின்றோம்.

கேள்வி:- மத்திய அரசு பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்துகிறதே? இன்றைக்கு கூட ரூ.2.50 ஏற்றியுள்ளதே?

பதில்:- இதை குறைத்தால், மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். இதை நாங்கள் வலியுறுத்துவோம்.

கேள்வி:- இந்த பட்ஜெட்டில் வந்து தமிழக காவிரி, கோதாவரி நதி நீர் இணைப்புக்கு இது வரைக்கும் நிதி ஒதுக்கீடு பண்ணவில்லையே?

பதில்:- இதற்கு ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறார்கள். தயாரித்த பிறகுதான் அதற்கு தேவையான நிதி எவ்வளவு என்பதை கணக்கிட்ட பிறகு தான் மத்திய அரசு அதற்குண்டான முடிவை எடுக்கும். ஏற்கெனவே அவர்கள் அந்த பணிகளை துவக்கி விட்டார்கள். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியினை துவக்கி விட்டார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து