மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் - முகமது ஜான், சந்திரசேகரன் - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு: நாளை மனுத் தாக்கல் செய்கிறார்கள்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் நாளை திங்க+ட்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சியான பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமை கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க. போட்டியிடும். 3 இடங்களில், 2 இடங்களுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சேலம் புறநகர் மாவட்டம் மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள சந்திரசேகரன் மேட்டூர் நகர செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். மேலும் மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் ரேணுகா. இவர் மேட்டூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சந்திர சேகரனுக்கு டாக்டர் பூர்ணிமா, ரேகா என்ற 2 மகள்களும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் அன்பு மணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் ஆகியோர் நாளை 8-ம் தேதி திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனர். அன்றுடன் வேட்பு மனுதாக்கலுக்கான கால அவகாசம் முடிகிறது. மறுநாள் 9-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 11-ம் தேதி கடைசி நாளாகும்.

11-ம் தேதி மனுக்கள் வாபஸ் முடிந்ததும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்படும். 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து