ஒளிவிலகல் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 34-வது மாநாடு - சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi inaug conference 2019 07 06

சென்னை : உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை 34-வது மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அது குறித்த  கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மேம்பட்ட திறனை கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் நிபுணர்களிடமிருந்து சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உத்திகளை கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கற்றுக் கொள்வதை ஏதுவாக்குகின்ற ஒரு செயல்தளமாக இந்த மாநாடு விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதில் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ. அறிவியல் குழு தலைவர் டாக்டர் மஹிபால் சச்தேவ், பொது செயலாளர் அமர் அகர்வால், தலைவர் டாக்டர் அமித் தரப்தர், முன்னாள் தலைவர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை குழுமத்தின் தலைவரும், ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ.  பொது செயலருமான அமர் அகர்வால் பேசுகையில்,

இம்மாநாட்டில் இத்துறையில் நிகழ்ந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இந்திய கண் அறுவை சிகிச்சையாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அமெரிக்க ஐக்கிய நாடு, துருக்கி, பிரேசில், ஜெர்மனி, எகிப்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து 20 முதன்மையான கண் அறுவை சிகிச்சை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.

இந்திய கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் கண் பராமரிப்பு திறன்களை இன்னும் பெருமளவு உயர்த்தவும் அவர்களது மேற்கத்திய சகாக்களுக்கும், தங்களுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப இடைவெளியை நிரப்பவும் மிகப் பெரிய அளவில் இந்த மாநாடு உதவும். ஒட்டுமொத்த அளவில், நோய் பாதிப்பை கண்டறிதல் மற்றும் அவைகளுக்கு சிகிச்சை வழங்கல் ஆகிய அம்சங்களில் இந்தியாவின் கண் பராமரிப்பு துறையின் திறன்களையும் மற்றும் சேவை வழங்குனர்களையும் கணிசமாக அதிகரிப்பதில் ஐ.ஐ.ஆர்.சி. மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறினார்.

கோர்ட் மார்ஷ்யல் என்ற நிகழ்வு, கண் மருத்துவியலில் அறுவை சிகிச்சை யாளர்களால் எதிர்கொள்ளப்படும் அறிவியல் சவால்களின் பல்வேறு நிலைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறது. இதில் இடம்பெறுகின்ற தீவிரமான முடிவெடுத்தல் செயல்பாட்டையும் மற்றும் அதன் விளைபயனையும் விவாதிக்கிறது. நேரடி செயல்முறையான வெட்லேப் கோர்ஸ், கண் மருத்துவயியல் சார்ந்த நிழற்பட போட்டி, திரைப்பட திருவிழா மற்றும் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு பலருக்கும் காட்டப்படுகின்ற அறுவை சிகிச்சை ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பயனளிக்கும். அறுவை சிகிச்சை அமர்வுகள், நேரலையாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிலிருந்து ஒளிபரப்பப்படும்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து