எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - நாளை காலை கவுன்சிலிங் தொடங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
minister vijayabaskar 2019 06 29

சென்னை : எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ் ரேங்க் பட்டியல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி நீட்தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் கணபதியை சேர்ந்த இளமதி, சிவமோனிஷ் குமார்,( திருநெல்வேலி) சென்னையை சேர்ந்த அன்புவண்ணன், ஸ்ரீகாந்த், தானியா, பிரியங்காரெட்டி, கோவசக்திமீனாள் , பெங்களுரை சேர்ந்த ஷாலினி ஜெயராமன் ஆகிய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடத்தில் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையிடங்களுக்கு பொதுப்பிரிவில் ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 13 மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதில் 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 741 மாணவர்களும் 19 ஆயிரத்து 612 மாணவியர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 5 சதவீத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு வீரர்களுக்குரிய இடங்களுக்கு 285 மாணவர்களும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளில் 691 பேரும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இவர்களில் மாநிலப் பாடத்தில் படித்த மொத்த மாணவர்களிந் 23 ஆயிரத்து 291 பேர், சி.பி.எஸ்.இ மூலம் படித்தவர்கள், 9841 பேர், பழைய. மாணவர்கள் 17 , 618 பேர், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 651 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 366 பேர் மாணவர்கள், 16 ஆயிரத்து 285 பேர் மாணவிகள், இவர்களில் பழைய மாணவர்கள் 14 ஆயிரத்து 387 பேர். இம்மாணவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படித்த கடப்பாவை சேர்ந்த மாணவர் ஷோடம் ஸ்ரீநந்தன்ரெட்டி என்ற மாணவர் 685 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மற்ற மாணவர்களும் பெரும்பாலோர் வெளிமாநில மாணவர்களே .

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். முதல் நாளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது,  தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3250 மாணவர் சேர்க்கையிடங்களும் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ கல்லூரியில் 100 இடங்களும் பெருந்துறையில் போக்குவரத்துக் கழகத்தின் கல்லூரியில் 100 இடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத 13 மருத்துவக் கல்லூரிகளில் 1800 என்று மொத்தம் 5400 எம்.பி.பி.எஸ் சீட்டுக்கள் உள்ளன. இதில் 580 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் 852 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு போக மீதியுள்ள 3 ஆயிரத்து 968 மாணவர் சேர்க்கையிடங்கள் கவுன்சிலிங்குக்கு ஒப்படைக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரியில் நூறு இடங்களில் 15 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதியுள்ள 85 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். இதே சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 80 இடங்களில் 12 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 68 இடங்கள் கவுன்சிலிங்குக்கு வழங்கப்படும். 17 சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத கல்லூரிகளின் 1760 மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்களில் ஆயிரத்து 70 இடங்கள் கவுன்சிலிங்கில் வரும் 690 மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பப்படும். மொத்தமுள்ள 1940 மாணவர் சேர்க்கையிடங்களில் 1, 213 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். மொத்தமுள்ள 5400 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களில் 3 ஆயிரத்து 968 இடங்களும் 1940 பி.டி.எஸ் இடங்களில் 1213 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என்று டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து