முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலுக்காக ரூ. 84 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரிஸ்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர்தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில்  54 வயதான இந்திய வம்சாவளி செனட் சபை எம்.பி. கமலா ஹாரிஸ்  உள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக நிதி திரட்டும் பணியில் அனைவரும் தீவிரமாக உள்ளனர்.

கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார். இருப்பினும் இவர் ஜோ பிடென், பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரை விட பின்தங்கிய நிலையில் இருக்கிறார். ஜோ பிடென் 21.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.150 கோடி), பெர்னி சாண்டர்ஸ் 18 மில்லியன் டாலர் (சுமார் ரூ.126 கோடி) திரட்டி உள்ளனர். நிதி திரட்டுவதில் கமலா ஹாரிஸ் மேலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒரு வேளை இவர் வேட்பாளராகி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெயரைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து