முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஷாப்பிங் மாலில் எரிவாயு கசிவால் பயங்கர வெடி விபத்து 2 பேர் கவலைக்கிடம்: 21 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் படுகாயம் அடைத்தனர். அதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பிளான்டிஷன் நகரில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய கட்டட சிதைவுகள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்களிலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலும் தூக்கி வீசப்பட்ட சிதைவுகள் தொலைகளை ஏற்படுத்தியுள்ளன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இந்த வெடிப்பால் சுற்றியுள்ள கட்டிடங்கள் உறுதி பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ஷாப்பிங் மால் கட்டிட இடிபாடுகளில் சிதைந்த எரிவாயு இணைப்பை கண்டெடுத்ததாகவும் இந்த குழாய் வெடித்ததால் விபத்திற்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து