அதிகளவில் யுரேனியத்தை செறிவூட்டுவோம்: ஈரான்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
uranium-Iran 2019 07 07

டெஹரான் : வல்லரசு நாடுகளுடான அணு சக்தி ஒப்பந்தம் வரையறுத்ததைவிட அதிக அளவில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு மதத் தலைவர் அயதுல்லா கமேனியின் முதுநிலை ஆலோசகர் அலி அக்பர் விலாயதி வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா நேரடியாக மீறி வருகிறது. ஐரோப்பிய நாடுகளோ மறைமுகமாக மீறி வருகின்றன. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், யுரேனியத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே செறிவூட்ட ஈரான் ஒப்புக்கொண்டு, அந்த வரம்பை கடைப்பிடித்து வருகிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மீறினால் அதன் அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகளை நாங்களும் மீறுவோம்.

அதன் ஒரு பகுதியாக, அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட அதிக அளவில் யுரேனியத்தை செறிவூட்டவும் ஈரான் தயாராக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகள் எந்த அளவுக்கு மீறுகின்றனவோ, அதே அளவுக்கு நாங்களும் மீறுவோம். அணுசக்தி ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகள் மதித்து, அதிலுள்ள அம்சங்களை கடைப்பிடித்தால், நாங்களும் அந்த ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றார் அவர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து