முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : லிபியாவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், அந்தச் சண்டையின் போது அகதிகள் தடுப்பு முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டு, 53 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் அந்த கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

லிபியா தலைநகர் திரிபோலியின் தஜூரா பகுதியில் அகதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், சண்டையில் ஈடுபட்டுள்ள அனைத்து குழுவினரும் உடனடியாக பதற்றத்தைத் தணித்து போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் கவுன்சில் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டையில் சுமார் 1,000 பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் 5,000 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து