மசூதிக்குள் நுழைய பெண்களுக்கான தடையை நீக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      இந்தியா
mosque enter women 2019 07 08

புது டெல்லி : இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்கக் கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்கக் கோரி அகில் பாரத் இந்து மகாசபையின் கேரள பிரிவின் தலைவர் சுவாமி தேதத்ரேய சாய் ஸ்வரூப் நாத் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கேரளா நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்படுபவர்கள் வந்தால் தான் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும். சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்க இயலாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து