குண்டுவெடிப்புக்கு காரணம் என்ன? இலங்கை எம்.பி. கருத்து

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      உலகம்
Sri Lanka-churches 2019 05 03

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதுதான் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பிற்கு காரணம் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இந்நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் விவாதிக்க முன்வரவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்தன.  அரசியல் மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அம்பாந்தோட்டை உள்ளதால் சீனாவை தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இங்கு கால்பதிக்க முயற்சி செய்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து