நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
shashi-tharoor--Nirmala-Sitharaman 2019 07 09

திருவனந்தபுரம் : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதன் மூலம் வரலாற்றை மீண்டும் உருவாக்கியிருப்பதாக சசிதரூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய சசிதரூர், 1970-ம் ஆண்டு இந்திராகாந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்ததாகவும் அவருக்குப் பின் இரண்டாவது பெண் தலைவர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் தமிழ் சங்க இலக்கியமான புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டு தெரிவித்த அவர், நிலம் புகுந்த யானை எனத் தொடங்கும் வரிகளை மேற்கோள் காட்டியது அவர்களது அரசு யானை போல் மெதுவாக செயல்படுவதை ஒப்புக் கொண்டது போல இருந்ததாகத் தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில் பல குறைகளைத் தெரிவித்த அவர் அதற்காக நிர்மலா சீதாராமனை மட்டுமே குறை கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து