காங்கிரஸ் புதிய தலைவரை நியமனம் செய்ய குழு அமைக்க வேண்டும்: ராகுலுக்கு ஜனார்த்தன் திரிவேதி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
Rahul Gandhi 2019 05 02

புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழு அமைக்க வேண்டும் என ஜனார்த்தன் திரிவேதி கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை திரும்ப பெற வைக்க கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போனது. அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அக்கட்சியில் உள்ள பிற தலைவர்களின் ராஜினாமாவும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழுவை அமைக்க வேண்டும் என ஜனார்த்தன திரிவேதி கூறியுள்ளார். முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரிவேதி பேசுகையில், புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முறைசாரா கலந்துரையாடல்களை விட, அதிகாரப்பூர்வமாக ஆலோசனையை மேற்கொண்டால் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். ராகுல் காந்தி குழுவை அமைத்து தொண்டர்கள், தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து