உலகக்கோப்பை எங்களுக்கே ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      விளையாட்டு
ricky pointing 2019 07 09

ரிக்கி பாண்டிங் : உலகக் கோப்பை எங்களுக்கே என்று ரிக்கிபாண்டிங் அதீத நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணிதான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்ததால், அரையிறுதி ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர். 

இந்நிலையில் இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பையை வெல்வோம் என்று அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக பணிபுரியும் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், உலகக்கோப்பையில் வீரர்கள் காயம் அடைவது வழக்கத்திற்கு மாறானது என்று கூற முடியாது. என்றாலும் கவாஜா, ஸ்டாய்னிஸ் அரையிறுதிக்கு முந்தைய ஆட்டத்தின் போது காயத்திற்கு உள்ளாது சற்று மாற்றத்தை ஏற்படுத்தும்.  உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்குச் செல்லும் போது இதுபோன்ற காயம் சிறந்ததாக இருக்காது.

உலகக்கோப்பை லீக் சுற்றில் ஏற்கனவே நாங்கள் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறோம். இந்த நாள் வரை நாங்கள் உலகக் கோப்பையில் தலைசிறந்த அணியாக இருக்கிறோம். கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றது சிறந்தது அல்லது. அதேபோல் மோசமான விஷயமும் அல்ல. அது எங்களுக்கான எச்சரிக்கையாகும். லீக் ஆட்டத்திற்குப் பிறகு சில நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி சிறந்த அணியாக உருவாகி அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இங்கிலாந்தை தோற்கடிக்க வீரர்கள் அடுத்த லெவல் வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நாங்கள் 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து