காஞ்சி அத்திவரதரை தரிசிக்க நாளை ஜனாதிபதி வருகை

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
Athivaratar 2019 07 06

புது டெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை 12-ம் தேதி வெள்ளி கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வரும் அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்தி வரதரை தரிசனம் செய்கிறார். பின்பு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டி கவர்னர் மாளிகை சென்று தங்குகிறார். மறுநாள் சனிக்கிழமை மாலை 4.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து