மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடக்கும் கூட்டத்தி்ல் விவாதம் நடத்தப்படக் கூடாது - மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 19-ம் தேதியன்று நடக்கும் சுற்றுச்சூழல்  நிபுணர் குழு கூட்டத்தில் விவாதம் நடத்தப்படவே கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளார்.

நீண்டகால பிரச்சினை

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் காவிரி பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் பல சட்டப் போராட்டங்களை நடத்தி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச் செய்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் போராடி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகம் ஒரு புது பிரச்சினையை எழுப்பி வருகிறது. அதாவது காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட கர்நாடகம் பகிரீத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு அந்த அணையை கட்டுவதில் மிக தீவிரமாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி கடிதம்

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதங்களில் அவர் கூறியிருப்பதாவது,

மேகதாது அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு அனுமதி தரக்கூடாது. இந்த விஷயத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்று கோரி கடந்த 24.6.2019 அன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் இப்போது வரும் 19-ம் தேதியன்று டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கமிட்டியின் இந்த செயல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறுகின்ற ஒரு செயலாகும். தமிழக அரசு கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட தனது கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பி வந்துள்ளது. காரணம், இது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் எதிரானது.

அனுமதி பெறவில்லை

இது தொடர்பாக கர்நாடக அரசு தமிழகத்திடம் இருந்து எந்த முன் அனுமதியையும் பெறவில்லை. காவிரி படுகையில் மேகதாது அணை கட்டவோ, அல்லது எந்த திட்டத்துக்கோ தமிழக அரசிடம் இருந்து கர்நாடகம் அனுமதி பெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக  நிபுணர் ஆய்வுக் குழு வரும் 19-ம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அவ்வாறு எந்தவித விவாதமும் நடத்தப்படக் கூடாது. அது தொடர்பாக நிபுணர் ஆய்வுக் குழுவுக்கு சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இது போன்ற செயல்களில் நிபுணர் ஆய்வுக்குழு ஈடுபடக் கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கும் இதே போல் ஒரு கடிதத்தை எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிலும் தனது மேற்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மேலும் கர்நாடக அரசு காவிரி படுகையில் மேகதாது அணை கட்ட எந்தவித அனுமதியையும் வழங்கக் கூடாது என்று ஜலசக்தி துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் முற்றிலும் எதிரானது என்பதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.   

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து