தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi ann assembly 2019 07 10

சென்னை : தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் ரூ. 9.58 கோடி செலவில் அமைக்கப்படும். 2019-2020ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்.

திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ரூ. 7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும். சேலத்தில் ரூ.ஒரு கோடியில் துணை பதிவுத்துறை அலுவலகம் கட்டித் தரப்படும்.  5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

கஜா புயலால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் ரூ. 200 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11, 441 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.12,500 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்படும். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தேவைக்கேற்ப கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக நடப்பாண்டில் ரூ. 125 கோடி செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக ரூ. 202.40 கோடி மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து