ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரராக சுனில் சேத்ரி தேர்வு

புதன்கிழமை, 10 ஜூலை 2019      விளையாட்டு
Sunil Chhetri 2019 07 10

புது டெல்லி : இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரருக்கான விருதுக்கு சுனில் சேத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரருக்கான விருதுக்கு சுனில் சேத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டனான சுனில் சேத்ரி 109 ஆட்டங்களில் பங்கேற்று 70 கோல்கள் அடித்துள்ள சாதனையாளர் ஆவார். ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரு எப்.சி.-க்காக விளையாடி வரும் சுனில் சேத்ரி இந்த விருதை பெறுவது இது 6-வது முறையாகும். ஏற்கனவே 2007, 2011, 2013, 2014, 2017–ம் ஆண்டுகளிலும் அவர் இந்த கவுரவத்தை பெற்று இருந்தார். வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இந்திய நடுகள வீரர் அப்துல் சமாத்தும், இந்தியாவின் சிறந்து கால்பந்து வீராங்கனை விருதை ஆஷாலதா தேவியும் பெறுகிறார்கள். இதே போல் சிறந்த நடுவராக தமிழகத்தின் ஆர்.வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து