15-ல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
Anna Arivalayam-2019 04 19

சென்னையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் குறித்து  முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து