முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சி அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி இன்று வருகை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக இன்று காஞ்சிபுரம் வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக இன்று 12-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். அன்று மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கிறார். மாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர் அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி விட்டு மறுநாள் காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து