முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா வழங்கிய 6 கட்டளைகள்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி 6 கட்டளைகளை வழங்கி உள்ளார்.

2021-ல் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்வதற்கான திட்டம் வகுப்பதில் முதல்வரும், அக்கட்சித்  தலைவருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கொல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பவனில் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோனை நடத்தினார். அந்த ஆலோசனையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 6 முக்கியமான கட்டளைகளை வழங்கினார்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இப்போது மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள்.  எந்தவொரு விவகாரத்திலும் சிக்காதீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை குறைக்க முயற்சி செய்யுங்கள். நிர்வாகம் மற்றும் காவல்துறையை நம்ப வேண்டாம். உங்களுக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள். சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் நடத்தை சரியாக வைத்திருங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 4 பேர் கொண்ட குழுவை உருவாக்குங்கள். அந்த குழுவில் ஒரு சமூக ஊடக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குச்சாவடி மேம்பாட்டு மேலாளரை நியமியுங்கள். தவறான அறிக்கைகளையோ, கருத்துகளையோ யாரும் சொல்லக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து