வலைதளங்களில் வைரலாகி வரும் ரவி சாஸ்திரியின் போலி புகைப்படம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      விளையாட்டு
Ravi Shastri-12-07-2019

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியினர் குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான தலைப்புடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியனர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் குழுவினர் இருக்கும் புகைப்படம் மோசமான எடிட் செய்யப்பட்டுள்ளது. போட்டோஷாப் நுணுக்கம் தெரிந்தவர்கள் புகைப்படத்தில் ரவி சாஸ்திரி அமர்ந்திருக்கும் இடத்தில் மதுபானத்தை இணைத்துள்ளனர். இந்த புகைப்படம் தவறான தலைப்பில் டுவிட்டரில் வலம் வருகிறது. எனினும், விவரம் அறிந்தவர்கள் இது தவறான புகைப்படம் என்பதை தெரிவிக்கின்றனர்.

இதன் உண்மை புகைப்படத்தை தேடியதில், புகைப்படத்தில் மதுபானம் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. ஜூலை 6-ம் தேதி இந்திய கிரிக்கெட் ஆணையமான பி.சி.சி.ஐ. இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியுற்ற நிலையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படுகிறது. இந்த புகைப்படம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி துவங்கும் முன் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து