முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவலா? ராணுவ தளபதி மறுப்பு

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தலாய்லாமா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீருக்குள் 5 கி.மீ. வரை ஊடுருவிய சீன ராணுவத்தால் எல்லையில் பதட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் மறுத்துள்ளார். 

திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவின் 84-வது பிறந்த நாள் விழா கடந்த 6-ம் தேதி காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள டெக்சோக் செக்டார் அருகேயுள்ள கோயில் பகுதியில் கொண்டாடப்பட்டது. விழாவின் போது அங்கு திபெத் கொடிகள் ஏற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் விடுதலை ராணுவ வீரர்கள் 2 வாகனங்களில் இந்திய எல்லைப் பகுதிக்குள் 5 கி.மீட்டர் தூரம் ஊடுருவினர். ஊடுருவியவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். அங்கு தங்கியிருக்கும் திபெத் அகதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்க மிட்டனர். மேலும் பலர் அப்பகுதியில் ஓடும் சிந்து நதியின் மறு புறத்தில் நின்றனர். எல்லையில் ஊடுருவியவர்கள் இந்திய பகுதிக்குள் சீனாவின் கொடி மற்றும் பேனர்களை கட்டினர். பேனர்களில் திபெத் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. திபெத்தை பிரிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் சீன வீரர்களை மேலும் நுழையாமல் தடுத்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் 30 முதல் 40 நிமிடங்கள் அங்கு தங்கியிருந்த சீன ராணுவ வீரர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இத்தகைய பதட்டமான சூழ்நிலைக்கு பின் இரு நாட்டு எல்லை படையினருக்கும் இடையேயான ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் இப்பிரச்சினையை சீன ராணுவ அதிகாரிகள் எழுப்பவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட தகவலை ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இது குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது,

சீன படையினர் தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெம்சோ செக்டாரில் உள்ள திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து